நாளை வெளியாகவிருக்கும் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் சிறப்பு காட்சி - அட்டகாசமான வீடியோ இதோ..

அகிலன் படப்பிடிப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு - Agilan team released Making Video | Galatta

இந்த ஆண்டின் வெளியாகவிருக்கும் மேலும் ஒரு பெரிய நட்சத்திரம் திரைப்படம்  ஜெயம் ரவியின் அகிலன். துறைமுகம் சார்ந்த கதைகளத்தில் அட்டகாசமாக உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய நிலையில் சில காரணங்களினால் வெளிவராமல் போனது. இதனையடுத்து ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அகிலன் திரைப்படம் நாளை  உலகெங்கிலும் பல திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’ படத்தையடுத்து இயக்குனர் கல்யான் கிருஷ்ணன் இணைந்துள்ள திரைப்படம் அகிலன். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜிராக் ஜானி, ஹரிஷ் பெரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் அகிலன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தில் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்ஷோசம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தி  டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 தளமும், தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் பேராதரவோடு நாளை வெளியாகவிருக்கும் அகிலன் திரைப்படத்தின் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் படப்பிடிப்பு உருவாக்கம் வீடியோ தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். துறைமுகம் சார்ந்து உருவாகி உள்ள படப்பிடிப்பு தளத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

Check out the making to feel the efforts made by @actor_jayamravi's #Agilan team to make it a grandeur one!

👉https://t.co/5ORTUg5MgK
Book your tickets now ..#AgilanFromTomorrow
#DirKalyan @priya_Bshankar @actortanya @janiChiragjani @SamCSmusic @shiyamjack @onlynikil pic.twitter.com/d4OyJLUfWS

— Screen Scene (@Screensceneoffl) March 9, 2023

கடந்த ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானது. இதில் முக்கிய கதாபாத்திரமான பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியின் நடிப்பு பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் படத்தையடுத்து தற்போது அகிலன் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனையடுத்து அடுத்த மாதமே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெடிக்கும் Me Too விவகாரம்..  இயக்குனர் மீது குற்றச்சாட்டு - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீனா மணிமேகலை.. விவரம் இதோ!
சினிமா

மீண்டும் வெடிக்கும் Me Too விவகாரம்.. இயக்குனர் மீது குற்றச்சாட்டு - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லீனா மணிமேகலை.. விவரம் இதோ!

விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு வெளியிட்ட Surprise Glimpse.. – வைரலாக்கி வரும் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு வெளியிட்ட Surprise Glimpse.. – வைரலாக்கி வரும் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..

ஆஸ்காரில் வாக்கு செலுத்திய முதல் தமிழ் நடிகர்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ஆஸ்காரில் வாக்கு செலுத்திய முதல் தமிழ் நடிகர்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..