ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!

கவினின் டாடா பட OTT ரிலீஸ் அறிவிப்பு,biggboss kavin in dada movie ott release announcement | Galatta

தொடர்ச்சியாக தரமான படைப்புகளை கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து ஆக்சன் திரில்லர் படமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த கலகத் தலைவன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு இணைந்து ஃபகத் பாசில், வைகைப்புயல் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

நல்ல தயாரிப்பு நிறுவனமாக மட்டுமல்லாமல் தரமான திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டில், FIR, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட் காத்து வாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி, குலுகுலு, திருச்சிற்றம்பலம், டைரி, கோப்ரா, கேப்டன், வெந்து தணிந்தது காடு, சர்தார், கட்டா குஸ்தி, லவ் டுடே, செம்பி ஆகிய திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கமே பிளாக்பஸ்டர் ஹிட்டாக அஜித்குமாரின் துணிவு படத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாகரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்த டாடா திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின் உடன் இணைந்து நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் டாடா திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவில், கதிரேஸ் அழகேசன் படத்துக்கு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

நல்ல ஃபீல் குட் திரைப்படமாக டாடா திரைப்படம் அனைவரது மனதையும் கவர்ந்துள்ள  டாடா திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வருகிற மார்ச் 10 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் டாடா திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…


 

explore the complexities of family, love and choices with this heartfelt story💙 #DadaOnPrime, Mar 10 pic.twitter.com/qEqqXSPruk

— prime video IN (@PrimeVideoIN) March 7, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு ஸ்பெஷல் பரிசு... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனுக்கு ஸ்பெஷல் பரிசு... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு... காலில் கட்டுடன் நடைபழகும் புகைப்படம்! விவரம் உள்ளே
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு எலும்பு முறிவு... காலில் கட்டுடன் நடைபழகும் புகைப்படம்! விவரம் உள்ளே

தளபதி விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா..? வைரலாகும் இயக்குனர் SAசந்திரசேகரின் பதில் உள்ளே!
சினிமா

தளபதி விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா..? வைரலாகும் இயக்குனர் SAசந்திரசேகரின் பதில் உள்ளே!