"கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே OK சொன்னேன்!"- லோகேஷ் கனகராஜ் உடன் முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த சார்லி! வீடியோ உள்ளே

லோகேஷ் கனகராஜை சந்தித்த முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த சார்லி,charlie opens about first meet with lokesh kanagaraj for managaram | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராகவும் உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறை கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற்ற விக்ரம் திரைப்படத்தில் ஃபேன் பாய் சம்பவம் செய்தார். பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். தளபதி விஜயின் 67வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வருகிறார். தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் ஆகியோரோடு இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணத்தில் முதல் படமாக அமைந்த மாநகரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சார்லி அவர்கள் முன்னணி வேடத்தில் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் கொன்றால் பாவம். வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ பிரதாப், சார்லி மற்றும் ஈஸ்வரி ராவ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொன்றால் பாவம் திரைப்படம் நாளை மார்ச் 10ஆம் தேதி முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. EINFACH ஸ்டுடியோஸ் தயாரிக்க, இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கொன்றால் பாவம் திரைப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவில், ப்ரீத்தி மோகன் மற்றும் பாபு இணைந்து படத்தொகுப்பு செய்ய, சாம்.CS இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நமது கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு பேசிய நடிகர் சார்லி அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, “லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் நீங்க இணைந்த திரைப்படம் மாநகரம் அந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட அனைவருமே ஒரு படம் இரண்டு படங்களில் நடித்தவர்கள் அல்லது புது முகங்கள் நீங்கள் மட்டும்தான் மூத்த நடிகர் என்று சொல்ல முடியும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களை அந்த கதாப்பாத்திரத்திற்காக சந்தித்தபோது, என்ன லாஜிக் இருந்தது? ஏனென்றால் உங்கள் கதாப்பாத்திரத்தையும் புதுமுகமாக போட்டு இருக்கலாம்? என கேட்டபோது, “இயக்குனர் லோகேஷ் அவர்கள் சார்லி தன்னைத்தானே புது முகமாக மாற்றிக் கொள்ள முடியும் என நினைத்திருக்கலாம். அதனால் போட்டிருக்கலாம். அந்த தயாரிப்பாளர்கள் பொட்டன்ஷியல் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஒரு இயக்குனரை அனுப்பினார்கள். நான் இயக்குனரிடம் தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி சொல்லி விட்டீர்களா என கேட்டேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “ஆமாம் சார் உங்களிடம் லைன் சொல்லுவதற்காக தான் வந்தேன்” என்றார். “சொல்லுங்கள்” என்றேன். “ஒரு வினாடி சார்” என சொல்லிவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது லேப்டாப்பை திறந்தார். திறந்து என்னிடம் காட்டினார். கதையை ஆரம்பிக்கப் போகிறார். உடனே நான் சொன்னேன், “லோகேஷ் நான் உங்களுக்காக செய்கிறேன்.” என்று சொன்னேன். எதற்காக என்று கேட்டால் அந்த லேப்டாப்பில் அவர் எனக்கு காட்டிய போட்டோவில் டாப் ஆங்கிளில் எக்மோர் ஸ்டேஷன். ஒரு பெரிய கூட்டம் அத்தனை பேரும் அவுட் ஃபோக்கஸ் ஒருத்தர் மட்டும் ஃபோக்கஸ்ல இருப்பாரு! அந்த விஷ்வலை பார்த்தவுடன் இந்த விஷ்வலை எடுத்துக் கொண்டு அந்த தாகத்தோடு இருக்கும் ஒரு ஃபிலிம் மேக்கர் உடன் நான் படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டேன்.” என பதிலளித்துள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் நடிகர் சார்லியின் அந்த முழு பேட்டி இதோ…
 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!

சினிமா

"இயக்குனர் பாலா பணத்த வாங்கிட்டு ஏமாத்திட்டாரு!"- படுத்த படுக்கையில் புலம்பிய பிதாமகன் பட தயாரிப்பாளர்! வீடியோ இதோ

STR48 அறிவிப்பு LOADING... கலாட்டாவின் சிறப்பு பேட்டியை குறிப்பிட்டு சிலம்பரசன்TR கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

STR48 அறிவிப்பு LOADING... கலாட்டாவின் சிறப்பு பேட்டியை குறிப்பிட்டு சிலம்பரசன்TR கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!