உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே

பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவும் ரஜினிகாந்த்,super star rajinikanth came to help pithamagan producer medical expanses | Galatta

பிதாமகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் VA.துரை அவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் மிகுந்த வேதனையில் மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் மிகுந்த துயரத்தில் வாடி வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக தனது எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சார்பில் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் VA.துரை தனது முதல் திரைப்படமாக இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் கதாநாயகனாக நடித்த என்னம்மா கண்ணு திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து தனது 2வது படத்தில் மீண்டும் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்த தயாரிப்பாளர் VA.துரை நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த லூட்டி திரைப்படத்தை தயாரித்தார்.

பின்னர் மீண்டும் இயக்குனர் சக்தி சிதம்பரம் உடன் இணைந்து நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்த லவ்லி திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் VA.துரை அடுத்ததாக 3வது முறை மீண்டும் சத்யராஜ் உடன் இணைந்து விவரமான ஆளு திரைப்படத்தை தயாரித்தார். இந்த வரிசையில் தனது அடுத்த திரைப்படமாக VA.துரை அவர்கள் தயாரித்த திரைப்படம் தான் பிதாமகன். கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படத்தை தயாரிப்பாளர் VA.துரை தயாரித்தார். பெரிதும் கவனிக்கப்பட்ட பிதாமகன் திரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளை பெற்றதுடன், நடிகர் சீயான் விக்ரமுக்கு முதல் தேசிய விருதையும் பிதாமகன் படம் பெற்றுக் கொடுத்தது. 

அடுத்ததாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த கஜேந்திரா திரைப்படத்தை VA.துரை தயாரித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த கஜேந்திரா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதோடு பெரும் தோல்வியை VA.துரை அவர்களுக்கு கொடுத்தது. அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் திரைப்படங்களை தயாரிப்பதில் இருந்து விலகி இருந்த VA.துரை அவர்கள் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கிறார். மேலும் தனது மருத்துவ சிகிச்சைகளுக்கான பணம் கூட இல்லாமல் மிகுந்த வேதனையில் வாடும் தயாரிப்பாளர் VA.துரை அவர்கள் வீடியோ மூலமாக தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் VA.துரை அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தற்போது படபிடிப்பில் இருப்பதால் நேரில் வந்து சந்திக்க முடியவில்லை என்றும் விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் மருத்துவ செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்களும் மருத்துவ உதவிக்காக 5 லட்ச ரூபாய் கொடுக்க முன் வந்திருப்பதாக தெரிகிறது.
 

சீக்கிரமா வந்துரும்... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2 குறித்து அதிரடியாக பேசிய விஜய் சேதுபதி! விவரம் உள்ளே
சினிமா

சீக்கிரமா வந்துரும்... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2 குறித்து அதிரடியாக பேசிய விஜய் சேதுபதி! விவரம் உள்ளே

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!

சினிமா

"இயக்குனர் பாலா பணத்த வாங்கிட்டு ஏமாத்திட்டாரு!"- படுத்த படுக்கையில் புலம்பிய பிதாமகன் பட தயாரிப்பாளர்! வீடியோ இதோ