சிவகார்த்திகேயனின் மாஸான "மாவீரன்" பட டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய முன்னணி OTT நிறுவனம்! அட்டகாசமான அறிவிப்பு இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்,sivakarthikeyan in maaveeran digital rights bagged by amazon prime | Galatta

தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து முன்னணி நட்சத்திர நாயகர்களில் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையின் வாயிலாக மக்களின் மனதில் இடம் பிடித்து தற்போது வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்து தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைத்து வயது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. 

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. முன்னதாக, இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK24 திரைப்படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். 

இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீசீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடலான சீனா சீனா பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மாவீரன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

We're glad to announce @PrimeVideoIN as our digital partner for #Maaveeran/#Mahaveerudu 🍿@Siva_Kartikeyan #MaaveeranOnPrime #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @iYogiBabu @dineshmoffl pic.twitter.com/Dtxuqx7kGC

— Shanthi Talkies (@ShanthiTalkies) March 8, 2023

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..
சினிமா

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயனை வரவேற்ற கல்யாண வீடு.. - வைரலாகும் SK வின் மாஸ் என்ட்ரி வீடியோ..
சினிமா

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயனை வரவேற்ற கல்யாண வீடு.. - வைரலாகும் SK வின் மாஸ் என்ட்ரி வீடியோ..