“AGR வரார்... போட்றா வெடிய!”- சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல படத்தின் அதிரடியான ACTION PACKED ட்ரெய்லர் இதோ!

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியீடு,silambarasan tr in pathu thala movie trailer out now | Galatta

அசாத்திய திறமையும், அளவில்லா கடின உழைப்பும், விட்டுக் கொடுக்காத விடாமுயற்சியும் கொண்டு தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களின் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR தனது மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை அட்டகாசமாக தொடங்கி இருக்கிறார். எக்கசக்கமான எதிர்மறை விமர்சனங்களை ஏறி மிதித்து தற்போது வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த வென்று தணிந்தது காடு திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முன்னதாக வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது. வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகத்தையும் தயாரிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். விரைவில் வெந்து தணிந்தது காடு 2 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய எழுச்சிகரமான வெற்றிப் பயணத்தின் அடுத்த திரைப்படமாக, தனது 48வது திரைப்படமாக தயாராகும் STR48 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி STR48 படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே AG.ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள திரைப்படம் பத்து தல. முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். PEN STUDIOS வழங்கும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மார்ச் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் அட்டகாசமான மாஸ் லுக்கில் வந்த சிலம்பரசன்.TR அவர்கள் ரசிகர்களிடம் பேசியபோது கரகோஷத்தாலும் ஆரவாரத்தாலும் அரங்கமே அதிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தின் மாஸ் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மிரட்டலான ட்ரெய்லர் இதோ…
 

ஆவலோடு எதிர்பார்த்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட பிக்கிலி இவன் தான்.. ட்ரண்டாகும் அட்டகாசமான வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஆவலோடு எதிர்பார்த்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட பிக்கிலி இவன் தான்.. ட்ரண்டாகும் அட்டகாசமான வீடியோ பாடல் இதோ!

பத்து தல படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் அடுத்த ஆக்சன் படம்... பரபரப்பான படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

பத்து தல படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் அடுத்த ஆக்சன் படம்... பரபரப்பான படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!

தனுஷின் சூப்பர் ஹிட் வாத்தி படக்குழு கொடுத்த அடுத்த ட்ரீட்... அட்டகாசமான நாடோடி மன்னன் வீடியோ பாடல் இதோ!
சினிமா

தனுஷின் சூப்பர் ஹிட் வாத்தி படக்குழு கொடுத்த அடுத்த ட்ரீட்... அட்டகாசமான நாடோடி மன்னன் வீடியோ பாடல் இதோ!