பத்து தல படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் அடுத்த ஆக்சன் படம்... பரபரப்பான படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!

கௌதம் கார்த்திக்கின் கிரிமினல் பட படப்பிடிப்பு நிறைவடைந்தது,gautham karthik in criminal movie shooting completed | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கௌதம் கார்த்திக், மணிரத்னம் அவர்களின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் யுத்த சத்தம். தனது வழக்கமான என்டர்டெய்னிங் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த யுத்த சத்தம் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் அசத்தலான திரைப்படங்கள் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முதலாவதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். PEN STUDIOS வழங்கும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இரண்டாவதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 படத்தில் குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் அஸ்டன், ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 7-ம் தேதி 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி வருகிறது கிரிமினல் திரைப்படம். இயக்குனர் தக்ஷிணா மூர்த்தி ராமர் எழுதி இயக்கியுள்ள கிரிமினல் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசன்னா.K.குமார் ஒளிப்பதிவில், மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பு செய்யும் கிரிமினல் திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம்.CS இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகியுள்ள இந்த கிரிமினல் திரைப்படத்தை பர்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கிரிமினல் திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது கிரிமினல் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

That's a wrap for #Criminal

Investigation in progress…

Starring @Gautham_Karthik @realsarathkumar
A @SamCSmusic Musical
Dir @Dhaksina_MRamar
Dop @prasannadop
Editor @eforeditor
Prod by @parsapictures & @BigPrintoffl pic.twitter.com/7Rh0ZVW49i

— Done Channel (@DoneChannel1) March 16, 2023

சினிமா

"நண்பா இவன் தான் அந்த பிக்கிலி!"- விஜய் ஆண்டனியின் அதிரடியான பிச்சைக்காரன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ் குறித்த அறிவிப்பு இதோ!

'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!
சினிமா

'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!