பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வந்தியத்தேவன் New Look – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..

வந்தியதேவன் கதாபாத்திரம் குறித்த சிறப்பு வீடியோ வைரல் - Here is the karthi vandhiyathevan special glimpse | Galatta

கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. லைகா நிறுவனம் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான இப்படத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, லால், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின் காக்கமனு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருப்பார். முதல் பாகத்தில் வெற்றிக்கு பின் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் உலகமெங்கும் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஏஆர் ரஹ்மான் பாடல்கள் ரசிகர்களை இன்னும் அதே குதூகலத்தில் வைத்திருக்கின்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அகநக பாடலின் முதல் பார்வை நேற்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்த வந்திய தேவன் கதாபாத்திரத்தின் உருவாக்கம் குறித்து படக்குழு சிறப்பு வீடியோவினை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வந்திய தேவன் கதாபாத்திரத்திற்கு தேவையான உடை வடிவமைப்பு மற்றும் அகநக பாடலின் சிறு காட்சியும் இடம் பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் பலரால் அதிகம் பகிரப் பட்டு வருகிறது.

Charming. Cheeky. Courageous. See how @Karthi_Offl transforms into everyone’s beloved #Vanthiyathevan!

1st Single from 20th March at 6PM!#PS2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @trishtrashers @ekalakhani #VikramGaikwad @kishandasandco pic.twitter.com/tCxIu5BjkY

— Lyca Productions (@LycaProductions) March 18, 2023

தமிழ் மொழியின் தலை சிறந்த நாவலான கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெற்றிருக்கும் வந்திய தேவன் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை வாசகர்களிடம் அப்போதே கொடுத்தது. காலம் கடந்தாலும் வந்திய தேவன் கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் கார்த்தி கட்சிதமாக நடித்திருபதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது பரவலான வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

கமல் ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம்..  - டி.ராஜேந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

கமல் ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம்.. - டி.ராஜேந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

“பாரிஸ் ஜெயராஜ் மாதிரி ஒரு தமிழ் படம் இதுவரை வந்ததே இல்லை” சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ
சினிமா

“பாரிஸ் ஜெயராஜ் மாதிரி ஒரு தமிழ் படம் இதுவரை வந்ததே இல்லை” சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு நடந்தது என்ன? -  வருத்ததுடன் ரசிகர்கள் பகிரும் வீடியோ.. - விவரம் இதோ..
சினிமா

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு நடந்தது என்ன? - வருத்ததுடன் ரசிகர்கள் பகிரும் வீடியோ.. - விவரம் இதோ..