ஆவலோடு எதிர்பார்த்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட பிக்கிலி இவன் தான்.. ட்ரண்டாகும் அட்டகாசமான வீடியோ பாடல் இதோ!

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட பிக்கிலி வீடியோ பாடல்,vijay antony in pichaikkaran 2 movie bikili video song | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தனக்கென தனி ஸ்டைலில் பல வைரல் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. குறிப்பாக நாக்க முக்க பாடலுக்குப் பிறகு மிகப்பெரிய உச்சம் தொட்ட விஜய் ஆண்டனி அந்த ரகத்தில் கொடுத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஹிட் பாடல்களாக இருக்கின்றன. முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி அவர்கள் நான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார். தொடர்ந்து “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்”, “எமன்”, “காளி”, “திமிரு புடிச்சவன்”, “கொலைகாரன்” என விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

கடைசியாக விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து ஓராண்டு இடைவெளிக்கு பின் இந்த 2023 ஆம் ஆண்டிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. அந்த வகையில், தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்களும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. 

இதனிடையே தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி தனது சூப்பர் ஹிட் திரைப்படமான பிச்சைக்காரன் 2 படத்தின் இரண்டாவது பாகமாக தற்போது தயாராகி வரும் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார். இந்தக் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பயங்கர விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி பலத்த காயம் அடைந்தார். தற்போது காயங்களிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஆரம்பகட்ட அறிவிப்பில் இருந்தே குறிப்பிடப்படும் ஆன்டி பிக்கிலி என்பது என்ன? அது யார்? என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு சமீபத்தில் விஜய் ஆண்டனி, “நான் தான் ஆன்டி பிக்கிலி” என தெரிவித்திருந்தார். எனவே பிக்கிலி யார்? என்ற கேள்வி அடுத்து கிளம்பியது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் பிக்கிலி பாடலை விஜய் ஆண்டனி தற்போது வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் பிக்கிலி வீடியோ பாடல் இதோ…
 

கடின உழைப்பால் உயர்ந்த KPYதீனா பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி... குவியும் வாழ்த்துக்கள்!
சினிமா

கடின உழைப்பால் உயர்ந்த KPYதீனா பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி... குவியும் வாழ்த்துக்கள்!

சினிமா

"நண்பா இவன் தான் அந்த பிக்கிலி!"- விஜய் ஆண்டனியின் அதிரடியான பிச்சைக்காரன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ் குறித்த அறிவிப்பு இதோ!

'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!
சினிமா

'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!