காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி சரவெடி… கோஸ்டி படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு,kajal aggarwal in ghosty movie trailer out now | Galatta

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா. கடந்த 2022 ஆம் ஆண்டில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கிய ஹே சினாமிக்கா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகிய நடிகை காஜல் அகர்வால், தற்போது மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே காஜல் அகர்வால் நடிப்பில் பாலிவுட்டில் உமா மற்றும் தமிழில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் கருங்காப்பியம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. 

முன்னதாக நடிகை காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு இருவரும் கோஸ்டி திரைப்படத்தில் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நாயகராக உயர்ந்துள்ள நடிகர் யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் நகைச்சுவையை முன்னுறுத்திய பல படங்களில் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அழுத்தமான கதாபாத்திரங்களிலும் கர்ணன் & மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்த பொம்மை நாயகி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பலரது பாராட்டுகளையும் பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்,இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், சிவகார்த்திகேயனின் மாவீரன் & அயலான்,  பிரசாந்தின் அந்தகன், மோகனின் ஹரா உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் யோகி பாபு, மிர்ச்சி சிவா உடன் இணைந்து சலூன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என யோகி பாபுவின் கலக்கலான பட்டியல் நீள்கிறது.

முன்னதாக நடிகர் பிரபுதேவாவின் குலேபகாவலி மற்றும் ஜோதிகாவின் ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் கோஸ்டி திரைப்படத்தில் யோகி பாபு - காஜல் அகர்வாலுடன் இணைந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் ஹாரர் காமெடி படமாக தயாராகியிருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இன்று மார்ச் 17ஆம் தேதி கோஸ்டி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோஸ்டி திரைப்படத்தின் கலகலப்பான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியானது. அந்த ஸ்னீக் பீக் வீடியோ இதோ…

 

பத்து தல படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் அடுத்த ஆக்சன் படம்... பரபரப்பான படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

பத்து தல படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் அடுத்த ஆக்சன் படம்... பரபரப்பான படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!

தனுஷின் சூப்பர் ஹிட் வாத்தி படக்குழு கொடுத்த அடுத்த ட்ரீட்... அட்டகாசமான நாடோடி மன்னன் வீடியோ பாடல் இதோ!
சினிமா

தனுஷின் சூப்பர் ஹிட் வாத்தி படக்குழு கொடுத்த அடுத்த ட்ரீட்... அட்டகாசமான நாடோடி மன்னன் வீடியோ பாடல் இதோ!

கடின உழைப்பால் உயர்ந்த KPYதீனா பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி... குவியும் வாழ்த்துக்கள்!
சினிமா

கடின உழைப்பால் உயர்ந்த KPYதீனா பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி... குவியும் வாழ்த்துக்கள்!