தனுஷின் சூப்பர் ஹிட் வாத்தி படக்குழு கொடுத்த அடுத்த ட்ரீட்... அட்டகாசமான நாடோடி மன்னன் வீடியோ பாடல் இதோ!

தனுஷின் வாத்தி பட நாடோடி மன்னன் வீடியோ பாடல் வெளியீடு,dhanush in vaathi movie vaa vaathi video song out now | Galatta

கடின உழைப்பும் விடாமுயற்சியும் அசாத்திய திறமையும் ஓர் மனிதனை எந்த உச்சத்திற்கும் எடுத்து செல்லும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். ஆரம்ப கட்டத்தில் உருவ கேலி செய்யப்பட்டு நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராகவும் இந்திய சினிமாவில் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராகவும் உயர்ந்திருக்கிறார். மேலும் தற்போது ஹாலிவுட் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள நடிகர் தனுஷ், அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தின் இயக்குனர்களான ரூஹோ சகோதரர்கள் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான தி கிரே மேன் திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது அதரடி ஆக்ஷனில் மிரள வைத்தார். 

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என வரிசையாக சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தயாராகும் திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில், ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட அதிரடி ஆக்ஷன் ப்ளாக் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 நவம்பரில் பூஜையோடு தொடங்கப்பட்டது. 

இதனையடுத்து தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸான வாத்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாகஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில், வாத்தி படத்திலிருந்து நாடோடி மன்னன் வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அசத்தலான அந்த வீடியோ பாடல் இதோ…
 

'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!
சினிமா

'நடிகை சிம்ரனின் 50வது தமிழ் படம்!'- சூப்பர் ஹிட் கூட்டணியின் அடுத்த ஹாரர் பட அட்டகாசமான புதிய அறிவிப்பு இதோ!

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா மாஸ் என்டர்டெய்னர் கேரன்டி!'- அதிரடியான கஸ்டடி பட ஆக்ஷன் ப்ளாக் டீசர் இதோ!

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!