சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் மாஸான நம்ம சத்தம்… மிரட்டலான முதல் பாடலின் GLIMPSE வீடியோ இதோ!

பத்து தல படத்தின் முதல் பாடல் GLIMPSE வீடியோ வெளியீடு,silambarasan tr in pathu thala movie first single namma satham glimpse | Galatta

மாநாடு & வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருக்கிறார். இதனிடையே கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பத்து தல படத்திற்கு பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல படத்தின் முதல் பாடலாக நம்ம சத்தம் பாடல் நாளை பிப்ரவரி 3ம் தேதி காலை 12:06 மணியளவில் வெளியாகவுள்ளது. விவேக்கின் பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள நம்ம சத்தம் பாடலுக்கு சிலம்பரசன்.TR மாஸாக நடனமாடியுள்ளார். இந்நிலையில் பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடலின் GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. மிரட்டலான அந்த வீடியோ இதோ…
 

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழா எப்போது..? வைரலாகும் அறிவிப்பு வீடியோ இதோ!
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழா எப்போது..? வைரலாகும் அறிவிப்பு வீடியோ இதோ!

பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!

தனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்!
சினிமா

தனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்!