‘கில்லி’ முதல் ‘தளபதி 67’ வரை... Nostalgic feel கொடுத்த திரிஷாவின் பதிவு.. - உற்சாகத்தில் ரசிகர்கள்..

விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா.. இணையத்தில் வைரல் - Trisha share beautiful picture with thalapathy vijay | Galatta

தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக  முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை திரிஷா மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா பின் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். லேசா லேசா, சாமி போன்ற படங்கள் திரிஷா வை தமிழ் சினிமாவில் ஜொலிக்க வைத்தது. குறிப்பாக தளபதி விஜயுடன் 2004 ல் கில்லி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். அதன் பின் தமிழ் மொழிகளில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த திரிஷா ‘நீ மனசு நாக்கு தெலுசு (எனக்கு 20 உனக்கு 18) திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின் மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக வளர்ந்தார் திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவில் பெரும்பாலான முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்த பெருமையை கொண்டுள்ளார் திரிஷா. தற்போது ரசிகர்கள் அவரை ‘தென்னிந்தியா சினிமா ராணி’ அழைத்து வருகின்றனர். அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே தென்னிந்தியா சினிமாவில் இன்றும் இருந்து வருகிறது. இடையே ஏற்பட்ட தோல்வி படங்கள் மற்றும் சிறு இடைவெளிக்கு பின் திரிஷா விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘96’ என்ற படத்தில் நடித்தார். மிகப்பெரிய வெற்றியை திரிஷா திரைப்பயணத்தில் அந்த படம் கொடுத்தது.  பின் கடந்த ஆண்டு திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை யாக நடித்து இந்திய முழுவதும் பிரபலமடைந்தார். தற்போது திர்ஷா தனது இரண்டாவது இன்னிங்க்ஸை நிதானமாக ஆட தொடங்கியுள்ளார்.

அதன்படி தற்போது திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த செய்தி திரிஷா ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமைந்துள்ளது. விஜயுடன் இணைந்து இதுவரை திரிஷா கில்லி திரைப்படம் தொடங்கி திருப்பாச்சி, ஆதி, குருவி என்று நான்கு படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் இவர்களின் காட்சி ரசிக்கும்படியும் பாராட்டும்படியும் இருக்கும். தொடர்ந்து நான்கு முறை இணைந்த இந்த கூட்டணி 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பட பூஜை கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் லோகேஷ் கனகராஜ் , திரிஷா உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் திரிஷா. அதில் “யாரெல்லாம் இதை கேட்டிருந்தீர்களோ.. காத்திருந்தீர்களோ..ஆசை பட்டிருந்தீர்களோ.. அவர்களுக்காக இதோ!..” என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து திரிஷா பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகின்றது.

For those of you who asked,waited and wished…
This one’s for you…❤️🙏🏻🧿 pic.twitter.com/QGOgmDm2Ty

— Trish (@trishtrashers) February 1, 2023

மேலும் ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் திரிஷாவின் பதிவின் கீழ் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் மாநாடு திரைப்படத்தின் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் “காத்திருந்த.. கேட்டிருந்த.. ஆசைப்பட்டவர்கள் வரிசையில் நானும் ஒருத்தி.. முதல் நாள் முதல் காட்சிக்காக காத்திருக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.  

I’m in this list of people who asked wished and waited! ♥️ can’t wait for FDFS now 😀

— Kalyani Priyadarshan (@kalyanipriyan) February 1, 2023

செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தளபதி 67 படத்தில்  இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் திரிஷா வுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா.. நெகிழ்ந்த ரசிகர்கள்  – வைரல் பதிவு இதோ..
சினிமா

விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா.. நெகிழ்ந்த ரசிகர்கள் – வைரல் பதிவு இதோ..

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 67’ பட பாடல்களை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..
சினிமா

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 67’ பட பாடல்களை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..

14 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படத்தில் இணைந்த திரிஷா.. ரசிகர்கள் கொண்டாட்டம் - ‘தளபதி 67’ படக்குழு வெளியிட்ட Special Video..
சினிமா

14 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படத்தில் இணைந்த திரிஷா.. ரசிகர்கள் கொண்டாட்டம் - ‘தளபதி 67’ படக்குழு வெளியிட்ட Special Video..