விஜய் சேதுபதி - நட்டி இணையும் புதிய அதிரடி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்... இயக்குனர் யார் தெரியுமா?- விவரம் உள்ளே

விஜய் சேதுபதி - நட்டி இணையும் புதிய அதிரடி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்,vijay sethupathi and natty next movie with kurangu bommai director | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதல்முறையாக வெப் சீரிஸிலும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் ஹிந்தி நடிகர் சாஹித் கபூர் உடன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள FARZI வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 10தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது.

முன்னதாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக நடிகர் சந்திப் கிஷன் உடன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்விஜய் சேதுபதி - சூரி இணைந்து நடித்த விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி இருக்கிறது. 

விடுதலை படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் தயாராகும் ஜவான், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக மும்பைக்கர், மற்றும் மௌன திரைப்படமான காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்குகிறார். விஜய் சேதுபதியின் சீதக்காதி மற்றும் அனபெல் சேதுபதி படங்களை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மிக முக்கிய வேடத்தில் நடிகர் நட்டி (எ) நடராஜன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ…
 

#VijaySethupathi Is Next Movie To Be Directed By Kurangu Bommai Director Nithilan Swaminathan
Produced By Passion Studios

Shooting Begins From Today https://t.co/xrxganSjv0 pic.twitter.com/KxLEcIbWwt

— CINE DHILIP (@CINEDHILIP) February 1, 2023

பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!

தனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்!
சினிமா

தனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்!

சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி-கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடி ஆக்சன் படமாக வரும் மைக்கேல்... மிரட்டலான புதிய GLIMPSE இதோ!
சினிமா

சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி-கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடி ஆக்சன் படமாக வரும் மைக்கேல்... மிரட்டலான புதிய GLIMPSE இதோ!