தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆரவ் இயக்குனர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த சைத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய ஆரவ் சீசன் 1-ன் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இதனை அடுத்து முன்னணி இயக்குனர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அடுத்ததாக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் சுரபி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆரவ் நடிப்பில், மீண்டும் வா அருகில் வா திரைப்படமும் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹேய் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ஜோஷ்வா இமைப்போல் காக்க படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹேய்-ஐ, ஆரவ் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் தாய் ராஹேய்-ம் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.