தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திர நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அண்ணாத்த மற்றும் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் ஆகிய திரைப்படங்களில் சதீஷ் நடித்திருந்தார்.

அடுத்ததாக விரைவில் வெளிவரவுள்ள நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்குகிறார் நடிகர் சதீஷ். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் நாய் சேகர் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல நடிகரான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது நடிகர் சதீஷ், பவித்ரா லக்ஷ்மியை கலாய்க்கும் கலகலப்பான புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியானது.

நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பவித்ர லக்ஷ்மியிடம் சதீஷ் ஒரு சிறிய கடையை கொடுத்து சிவகார்த்திகேயன் பேசுகிறார் என சொல்ல பவித்ரா லக்ஷ்மி ஏமாறும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.