தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் ரிலீஸாகிறது.

இசையமைப்பாளர் தமன் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வைரல் ஹிட் ஆகியிருக்கும் நிலையில், தற்போது வெளிவந்திருக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லரும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை எதிர வைத்துள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியில் தளபதி விஜய் அவர்கள் குறித்தும் வாரிசு திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஷோபி மாஸ்டர் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், ரஞ்சிதமே பாடலுக்கு ஒரு HOOK ஸ்டெப் இருக்கிறது, தீ தளபதி பாடலுக்கு ஒரு HOOK ஸ்டெப் இருக்கிறது, அதேபோல் ஷோபி மாஸ்டரின் பாடலிலும் HOOK ஸ்டெப் எதிர்பார்க்கலாமா..? என்ன கேட்டபோது “பார்க்கலாம்” என பதிலளித்தார்.

தொடர்ந்து எப்படி இருக்கிறது அந்த பாடல் அது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்? எனக் கேட்டபோது, “பாட்டு தான் நீங்கள் கேட்டீர்களே ஜிமிக்கி பொண்ணுனு ஒரு பாடல் செய்திருக்கிறேன்.” என பதிலளித்தார். இதனை அடுத்து இன்னொரு பாடல் நாங்கள் கேட்கவே இல்லையே? என கேட்டபோது, “அது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அது பாடல் என்று சொல்ல முடியாது அது ஒரு மியூசிக் பிட் அது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை” என ஷோபி மாஸ்டர் பதிலளித்துள்ளார். எனவே ரசிகர்களுக்கு விருந்தாக வாரிசு படத்தில் சர்ப்ரைஸாக ஒரு மியூசிக்கல் பிட்டுக்கு தளபதி விஜயின் மாஸான நடனம் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். நடன இயக்குனர் ஷோபி மாஸ்டரின் அட்டகாசமான பேட்டி இதோ…