ஆரம்பகாலக் கட்டத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் 'பூவே உனக்காக' மூலம் அனைவரது வரவேற்பையும் பெற்றவர் விஜய். பின் குடும்பங்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக தத்தெடுக்குமளவு குடும்பங்களின் ரசனைக்கு தீனி போடும் படங்களை மட்டுமே கையில் எடுத்தார் விஜய்.  'காலமெல்லாம் காத்திருப்பேன்' , 'காதலுக்கு மரியாதை' , 'துள்ளாத மனமும் துள்ளும்' , 'பிரியமானவளே' , 'மின்சார கண்ணா' , 'பிரண்ட்ஸ்' என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நம்பகத்தன்மையான ஒரு ஆளாக மாறினார். மேலும் ரஜினி சாயலில் நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் குழந்தைகளை கவர்ந்தார்

 

vintage vijay returns to impress family audience special article varisu trailer

அதன்பின் அவ்வப்போது 'தமிழன்' , 'திருமலை' போன்ற படங்களில் கமர்ஷியல் கொடுத்திருந்தாலும்  'கில்லி'  திரைப்படம் மூலம் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் ஹீரோ பட்டியலில் இடம் பிடித்தார் விஜய். அதன் பின் நடித்த படங்கள் அனைத்தும் அந்த வகையில் சேர்ந்தது.  இளைய தளபதியாக தனகென்ற ஒரு பட்டாளத்தை உருவாக்கினார். அதே நேரத்தில் குடும்பங்களின் வருகையும் விஜய் ஒதுக்கவில்லை, விஜய் படம் என்றாலே குடும்பங்கள், குழந்தைகள் என ரசிக்குமளவு படங்களை கமர்ஷியல் எலிமேண்ட்டுகளுடன் கொடுத்தவர் விஜய். அதன்படி 'திருப்பாச்சி' , 'சிவகாசி', 'மதுர' , 'போக்கிரி' , 'வேட்டைக்காரன்' என தொடர்ந்து வசூலையும் சினிமா ரசிகர்களையும் ஒருசேர அழைத்து சென்றார்.

vintage vijay returns to impress family audience special article varisu trailer

அதன் பின் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய் வித்யாசமான தோற்றத்தில் மிடுக்கான 'ஆர்மி' மேனாக தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'துப்பாக்கி' . விஜய் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு வைரகல் இன்று வரை பெரும்பாலான ரசிகர்களுக்கு மிக பிடித்த படமாக துப்பாக்கி இருந்து வருகின்றது. அதன்பின் சில வெற்றி படங்களாகவும் சில தோல்வி படங்களாகவும் அமைய தொடங்கியது. அதன் பின் இயக்குனர்  அட்லியுடன் இணைந்த விஜய் 'தெறி' என்ற பாக்ஸ் ஆபிஸ் படத்தில் நடித்தார். விஜய் அட்லி கூட்டணி ரசிகர்களுக்கு பிடித்து போக மீண்டும் இணைந்த அந்த  கூட்டணி மெர்சல் என்ற படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. அந்த படத்தின் மூலம் தான் ‘இளைய தளபதி’ என்ற பட்டம் ‘தளபதி’ என மாறி மிகப்பெரிய நட்சத்திர அடையாளம் ஜொலிக்க தொடங்கியது. இவ்விடையே தலைவா படத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின் விஜய் படங்களில் அமைந்த அரசியல் வசனங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாகவும் பேசுபொருளாகவும் மாறியது. தலைவா படத்திலிருந்து இன்று வரை விஜய் படம் வெளியாகுமென்றால்  பிரச்சனையுடன் தான் வெளியாகிறது. அதையும் நேர்த்தியாக கையாண்டு படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது  அதன் பின் 'சர்கார்' எனும் அரசியல் படத்தில் நடித்து அவரின் அரசியல் நிலைப்பாட்டை பேசி பெரும் பிரச்சனையை கொண்டு வந்தது. மேலும் விஜய் படங்கள் வெளியாவதற்கு முன் ஒரு பிரம்மாண்ட ஏற்பாட்டுடன் சில ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது  இதில் விஜய் பேசும் பேச்சுகளும் ரஜினியின் பாணியில் அவரது குட்டி கதைகளும் வைரலாவது வாடிக்கை. 'சர்கார்' படம் சரியாக எடுபடவில்லை என்பதால் தன் விருப்பமான இயக்குனரான அட்லியுடன் மீண்டும் கைக்கோர்த்து ‘பிகில்’ என்ற விளையாட்டை மையப்படுத்தி படம் வெளிவந்தது. வழக்கம்போல வசூலை குறிவைத்தே படம் நகர்ந்தது ஆனால் அனைத்து தரப்பினரின் ரசனையை தொடவில்லை.

vintage vijay returns to impress family audience special article varisu trailer

மேலும் வழக்கமான ஆக்ஷனில் இருந்து சற்று விலகி ட்ராக் மாற்றி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தார். இளம் இயக்குனர் என்பதை தாண்டி கைதி எனும் அருமையான திரைப்படத்தை இயக்கியவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.மேலும் அதன் படி ‘மாஸ்டர்’ படம் உருவானது. இதில் மற்றொரு நட்சத்திரம் விஜய் சேதுபதி நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஊரடங்கிற்கு பின் வெளிவந்த படம் என்பதால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்களுக்கும் பிடித்த படமாக மாறியது. இருந்தும் சில விமர்சனங்கள் எழுந்தது. விஜயை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்திய துப்பாக்கியை போல்  மாஸ்டர்  திரைப்படமும் விஜய் க்கு புதிய அனுபவத்தை கொடுத்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதனிடையே இயக்குனர் சங்கரின் ‘நண்பன்’ திரைப்படம் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

அட்லி மூலம் இளம் இயக்குனருடன் இணைந்தால் வெற்றி பெறலாம் என்ற டெம்ளேட்டை லோகேஷ் கனகராஜ் மூலம் மீண்டும் கையில் எடுத்தார் அதனை தொடர்ந்து ‘டாக்டர்’ படம் எடுத்து கவனம் பெற்ற நெல்சன் திலீப் குமாருடன் இணைந்தார் விஜய். அதன்படி ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவானது. நிறைய ஆக்ஷன் காட்சிகளுடன் சட்டிலாக நடித்த விஜயை அனைவரும் வரவேற்றனர். எல்லா காட்சியிலும் மாஸாக தோன்றிய விஜயை அனைவரும் ரசித்தனர். ஆனால் படம் பெரிதளவு எடுபடவில்லை.அதனை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனருடன் கை கோர்த்தார்.  வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படம் என்று நினைத்த ரசிகர்களுக்கு தொடர்ந்து ஆச்சரியத்தை கொடுத்து வந்தது படக்குழு.

வெங்கடேஸ்வரா கிரியேஷன் தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய விஜய் படத்திற்கு படத்தின் தலைப்பு ‘வாரிசு’ என டைட்டில் வைக்கப்பட்டது. முன்னதாக தெறி,மெர்சல்,சர்கார்,பிகில், மாஸ்டர்,பீஸ்ட் என்று மாஸ் டைட்டில்களில் நடித்த விஜய் க்கு 'இப்படி ஒரு தலைப்பா' என்று விமர்சனங்கள் எழுந்தது. அதன்பின் படத்தில் நடித்த நடிகர்கள் குறித்து தகவல்கள் வெளியாகின ரஷ்மிகா மந்தனா , சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த் மேகா,சங்கீதா, ஷ்யாம்,சுமன், யோகி பாபு, விடிவி கணேஷ், ஸ்ரீமன்  என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இணைந்து. அதன்படி படம் ஒரு குடும்ப படமாக உருவாகவுள்ளது என தெரியவர விஜய்  கமர்ஷியல் பட ரசிகர்கள் சிலர்  ஏமாற்றமடைந்தாலும் பெரும்பாலான  ரசிகர்கள் மற்றும் பொது ரசிகர்கள் இதனை வரவேற்றனர். இதனிடையே படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் வழக்கம் போல இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அரசியல் பாய்ச்சல் இல்லாமல் அன்பு தான் எல்லாமே என்று தன்மையுடன் பேசியது ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் பெற்றது. மேலும் பல எதிர்பார்ப்புகளை சுமந்து வரும் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

vintage vijay returns to impress family audience special article varisu trailer

டிரைலரில், கோடீஸ்வர வீட்டு  கூட்டு குடும்பத்தில்  கடைக்குட்டியாய் வருகிறார் விஜய். சில பிரச்சனையால்  குடும்பம் பிரிந்து போக அப்பாவின் பிசினசை கையிலெடுத்து வில்லனுக்கு சவால் கொடுத்து அதிரடி காட்டுகிறார். இதனிடையே குடும்பங்களின் உணர்வையும் அதில் வரும் சிக்கல்களையும் பேசி வருகிறார் விஜய். படமும் அதன்படியே அமைந்திருக்க கூடும். ஒவ்வொரு காட்சியிலும் இளமை ததும்பும்  துள்ளளுடன் வலம் வருகிறார் விஜய். மொத்தத்தில் தளபதி விஜய் நடிப்பில் பண்டிகை நாட்களை குடும்பங்களுடன் கொண்டாட ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக தயாரகிவுள்ளது வாரிசு வரும் ஜனவரி பொங்கலையொட்டி 11 - ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக ரசிகர்களுக்கு மட்டும் படம் கொடுத்து வந்த விஜய் சற்று விலகி குடும்பங்கள் ரசிக்கும் படைகளை கொடுத்தது 90 களில் பார்த்த விஜயை நினைவுக்கு கொண்டு வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் தன் துரு துரு பார்வையுடன் மெல்ல நடந்து காதல் வசனம் பேசி, அவருக்கே உரித்தான ஒரு சிரிப்புடன் கால்களில் மணல்களை தட்டி, பூக்கள் பறித்து தன்மையான விஜயை இதில் பெரும்பாலும் பார்க்க முடியும் என்பது டிரைலர் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

vintage vijay returns to impress family audience special article varisu trailer

பஞ்ச் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் கட்டாயம் வைக்க வேண்டிய சூழல். அது இருந்தால் தான் அவரது ரசிகர்களையும் திருப்திபடுத்த முடியும். அம்மா,அப்பா, அண்ணன்கள் என விஜயை சுற்றிவலைக்கும் செண்டிமண்டுகள் இடையே  இப்படி ஒரு கமர்ஷியல் எலிமெண்டுகள் இருப்பது ஒன்னும் தவறாக தெரியவில்லை. பொதுவாகவே பொங்கல் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்கு எளிதில் மறக்க முடியாது.குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மறக்க முடியாத பொங்கலாக இருக்கும். நிச்சயம் வாரிசு வின்டேஜ் விஜயை கண்ணில் காட்டும் என நம்புவோம்.