விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்தார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் ஷிவானி நாராயணன்.சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார் ஷிவானி.பிக்பாஸில் இருந்து வெளியேறிய சில படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார் ஷிவானி.செம பிஸியாக நடித்து வரும் ஷிவானி நேற்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் ஷிவானி Wildcard என்ட்ரியாக வருவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதிலளித்த அவர் பட வேளைகளில் பிஸியாக இருப்பதால் நிச்சயம் வரமாட்டேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

shivani narayanan clears rumours on entering bigg boss ultimate as wildcard entry

shivani narayanan clears rumours on entering bigg boss ultimate as wildcard entry