நெல்சன்-அருண் மாதேஸ்வரன் வரிசையில் மீண்டும் தமிழ் இயக்குனருடன் சிவராஜ்குமார்... கேப்டன் மில்லர் தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!

கேப்டன் மில்லர் தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சிவ ராஜ்குமார்,shivarajkumar sathya jyothi films new movie shivanna130 announcement | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு தமிழ் இயக்குனரின் புதிய படத்தில் கேப்டன் மில்லர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிப்பவர் சிவ ராஜ்குமார். கடந்த 1974 ஆம் ஆண்டு ஸ்ரீ சீனிவாச கல்யாணா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சிவராஜ் குமார் அவர்கள் 1986 ஆம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக களமிறங்கினார். கிட்டத்தட்ட தனது திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நெருங்கி இருக்கும் நடிகர் சிவ ராஜ்குமார் கன்னடத்தில் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மஃப்டி திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இந்த மஃப்டி திரைப்படம் தமிழில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல என ரீமேக் செய்யப்பட்டது.

இந்த 2023 ஆம் ஆண்டில் கடந்த மார்ச் மாதம் கன்னடத்தில் வெளிவந்த பீரியட் கேங்ஸ்டர் படமான கப்ஜா திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிவ ராஜ்குமார் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. கன்னடத்தில் மட்டும் நீ சிகோவரிகோ, KD- கர்நாடகா டமனகா, அஸ்வத்தாமா, கோஸ்ட், 45, சத்தியமங்கலா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சிவ ராஜ்குமார் அவர்கள், தனது மஃப்டி படத்தின் PREQUEL படமாக வர இருக்கும் பைரதி ரணங்கள், மற்றும் கப்ஜா 2 ஆகிய படங்களிலும் நடிக்க இருக்கிறார். தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டலான முக்கிய வேடத்தில் சிவராஜ் குமார் நடித்திருக்கிறார் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதேபோல் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பீரியட் ஆக்சன் திரில்லர் படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்திருக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்து தனது திரை பயணத்தில் 130வது திரைப்படமாக உருவாகும் #Shivanna130 எனும் கன்னட படத்தில் இயக்குனர் சிவராஜ் குமார் நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை தமிழில் ஈட்டி மற்றும் ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார். காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரம் போன்ற நிழல் உருவம் கொண்ட சிவராஜ்குமாரின் போஸ்டரோடு வந்திருக்கும் இந்த அறிவிப்பால் இந்த படம் ஒரு அதிரடி போலீஸ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிவராஜ்குமாரின் 130 வது படத்தின் அறிவிப்பு இதோ…
 

Very Happy to begin our association with the Karunada Chakravarthy , Dear @NimmaShivanna through #Shivanna130 in Kannada ♥️🙏

Wishing the legend Dr. Shivanna , a very Happy birthday 🎉💐

Shooting starts Soon 🎬
Written & Directed by @dir_raviarasu pic.twitter.com/IRlDloIYjq

— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 12, 2023

இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!
சினிமா

இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!
சினிமா

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்துடன் இணைந்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்துடன் இணைந்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான அறிவிப்பு இதோ!