‘என் இதய துணைவியே ஆரத்யா..’ சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான காதல் பாடல் இதோ..

சமந்தாவின் குஷி பட இரண்டாவது பாடல் வெளியானது வைரல் வீடியோ உள்ளே - Samantha Vijay Devarakonda Kushi 2nd single out now | Galatta

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக பல ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது கதாநாயாகி மையப்படுத்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சமந்தா தமிழ், தெலுங்கு என மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தற்போது கொடி கட்டி பறந்து வருகிறார். தற்போது சமந்தா இந்தியில் சிடாடேல் என்ற இணைய தொடரில் தற்போது நடித்து வருகிறார்.  மற்றும் சென்னை ஸ்டோரி என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் முன்னதாக வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் படு தோல்வி அடைந்த நிலையில் முழுமையான வெற்றிக்காக சமந்தா தற்போது ஆயத்தமாகி வருகிறார். இதனிடையே சமந்த நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ‘குஷி’.

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘குஷி’ காதல் கதையை மையாமாக கொண்ட திரைப்படமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் ஜெயராம், சச்சின் கேதகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹேஷம் அப்துல் வஹாப்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் சமந்தாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற இரண்டாவது பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ஆரத்யா என்று தொடங்கும் இந்த பாடலை தமிழில் சித் ஸ்ரீ ராம் – சின்மயி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தமிழில் பாடலாசியர் மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். ஹேசம் அப்துல் வஹாப் இசையில் வெளியான ஆரத்யா பாடல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. முன்னதாக இந்த படத்தில் வெளியான என் ரோஜா நீயே பாடல் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இளம் தம்பதியர் இடையிலான நெருக்கம் குறித்து உருவான இப்பாடலில் சில காட்சிகளை சேர்த்து லிரிக் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ள ஆரத்யா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

மகாராஜாவாக வரும் மக்கள் செல்வன்.! விஜய் சேதுபதியின் 50 வது பட டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் First Look உள்ளே..
சினிமா

மகாராஜாவாக வரும் மக்கள் செல்வன்.! விஜய் சேதுபதியின் 50 வது பட டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் First Look உள்ளே..

“நயன்தாராவிடம் உஷாராக இருங்கள்..!” விக்னேஷ் சிவனுக்கு கியூட் அட்வைஸ் வழங்கிய ‘ஜவான்’ ஷாருக் கான்..
சினிமா

“நயன்தாராவிடம் உஷாராக இருங்கள்..!” விக்னேஷ் சிவனுக்கு கியூட் அட்வைஸ் வழங்கிய ‘ஜவான்’ ஷாருக் கான்..

மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..
சினிமா

மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..