ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘தேனிசை தென்றல்’ தேவா.. – திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்த ‘மாமன்னன்’ படத்தின் ‘நெஞ்சமே’ பாடல் இதோ..

தேனிசை தென்றல் தேவா குரலில் மாமன்னன் படத்தின் நெஞ்சமே பாடல் வெளியானது - Ar Rahman Maamannan Movie nenjame nenjame reprise version out now | Galatta

தமிழ் திரையுலகில் தற்போது அதிகம் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜ். சமூக நீதி கருத்துகளை தன் திரைப்படங்கள் மூலம் நேர்த்தியாக கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்று தற்போது ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதன்படியே அவரது முந்தைய திரைப்படங்களான பரியேரும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் சமூக நீதி பேசி வெற்றியடைந்தது. இதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்கிரமம் கூட்டணியில் புது படம் மற்றும் சொந்த தயாரிப்பில் ‘வாழை’ என்ற படங்களை மாரி செல்வராஜ் அடுத்தடுத்த ரிலீஸ் க்கு வைத்துள்ளார்.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அட்டகாசமான கூட்டணியில் குடுத்தால் சிறப்பாக இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் மாமன்னன் படத்திலிருந்து முன்னதாக வெளியான அனைத்து பாடல்களும் இணையத்தில் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் கில் உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வழங்கிய இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

கடந்த ஜூன் 29ம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நேர்மையரையான விமர்சனங்களை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அரசியல் கதைகளத்தில் குடும்பம் சந்திக்கும் பிரச்சனையை வலிமையாக பேசி கவனம் ஈர்த்துள்ளது. படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரவால வாழ்த்து மழை வந்தவண்ணம் உள்ளது. அட்டகாசமான வெற்றியை தொடர்ந்து தற்போது மாமன்னன் திரைப்படம் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு ‘நாயகுடு’ என்ற பெயரில் நாளை வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் மாமன்னன் படத்தில் சர்ப்ரைஸாக இடம் பெற்ற தேனிசை தென்றல் தேவா அவர்களின் குரலில் நெஞ்சமே நெஞ்சமே பாடலின் லிரிக் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் யுகபாரதி எழுதி விஜய் யேசுதாஸ், சக்தி ஸ்ரீ கோபாலன் பாடி காதல் பாடலாக வெளியான இப்பாடல், மாமன்னன் படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளுக்கு பின்னணியில் இடம் பெற்றது. பிரபல இசையமைப்பாளர் தேவா குரலில் இடம் பெற்ற இப்பாடலுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக படக்குழுவினரால் இணையத்தில் இப்பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

மேலும் பாடல் குறித்து மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ், “கர்ணன் படத்தின் மஞ்சனத்தி புராணம் பாடலுக்கு பின் மனதை மயக்கும் குரலில் மற்றொரு பாடலை பாடியதற்கு நன்றி தேவா சார்..” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மாரி செல்வராஜ் பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Thank you the one and only ‘Thenisai Thendral’ Deva sir ❤️ for another song after Manjanathi Puranam from your soulful voice! #Maamannan 🤴@arrahman @Udhaystalin @KeerthyOfficial @RedGiantMovies_ @SonyMusicSouth https://t.co/fzC57xju2A pic.twitter.com/Ul3isqQzhv

— Mari Selvaraj (@mari_selvaraj) July 12, 2023

 

மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..
சினிமா

மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..

‘மாவீரன்’ சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்.! – விவரம் உள்ளே..
சினிமா

‘மாவீரன்’ சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்.! – விவரம் உள்ளே..

அழகான புகைப்படங்களுடன் செல்ல மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்.! – வாழ்த்துகளுடன் வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

அழகான புகைப்படங்களுடன் செல்ல மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்.! – வாழ்த்துகளுடன் வைரலாகும் பதிவு உள்ளே..