“சுயநலத்திற்காக சிலர் செய்யும் செயல் வீணானது..” விமர்சனங்களை அடித்து நொறுக்கிய விஷ்ணு விஷாலின் பதிவு..

ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால்  - Vishnu vishal about Aishwarya rajinikanth lal salaam movie | Galatta

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். படத்திற்கு படம் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை ஆச்சரிய படுத்தி கொண்டு வருபவர் விஷ்ணு விஷால் . அதன்படி வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, ஜீவா, ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் இவரது திரைபயணத்தில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் மிக முக்கியமான படங்களாக உள்ளது. இதன் மூலம்  தரமான திரைப்படங்கள் நிச்சயம் கொடுப்பார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் கொடுத்து கொண்டு வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் FIR, கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால், மோகன் தாஸ், ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  

இதனிடையே விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட் கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க மற்றொரு நாயகனாக விக்ராந்த் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சிறப்பு கௌரவ தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்  லால் சலாம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் சிறப்பாக இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். 

கடந்த ஆண்டு இறுதியில் பூஜை நடைபெற்று பின் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட லால் சலாம் படப்பிடிப்பு சென்னை, மும்பை போன்ற பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால் சலாம் படப்பிடிப்பில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பில் அவரது பங்கை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக படக்குழு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. படக்குழுவினருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

SuperStar 🌟 Signs Off in Style! The team rejoices 🥳 as the shooting for #MoideenBhai's portion is wrapped! 🤗

#LalSalaam 🫡

🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕… pic.twitter.com/XsAdUKdOwP

— Lyca Productions (@LycaProductions) July 12, 2023

மேலும் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது திரைப்பயணம் குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அவர் பதிவில்,

என்னை பின்னுக்கு இழுக்க  நினைப்பவர்கள் , ஒவ்வொரு முறையும் எனது சமூக வலைதளத்தின் நான் எது சொன்னாலும் அதனை குறை சொல்பவர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். சிலர் தங்களது சுயநலத்திற்காக இன்னும் கீழ்மையான செயல்களை செய்துவருகிறார்கள். மன்னிக்கவும் உங்களது முயற்சிகள் எல்லாம் வீணானது .  நீங்கள் என்னை மேலும் உயரத்திற்குச் செல்ல ஊக்குவித்து வருகிறீர்கள்..  இது தான் அதற்கு சிறந்த ஆதாரம்..

இந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எளிதில் வரவில்லை.  பல வருடன் நேர்மை, கடின உழைப்பு என்னை இந்த இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. என் கனவில் கூட நினைத்து பார்க்காத வாய்ப்பு இந்த லால் சலாம்.

படப்பிடிப்பின் போது நான் பார்த்த ஒவ்வொரு தருணத்திற்கும் மேலும் எனக்கு கொடுத்த அறிவுரை என்னை பற்றியும் என் படங்கள் குறித்தும் நேரடியாக வந்த பாராட்டுகளுக்கு தலைவருக்கு பெரிய நன்றி..  இதில் உண்மை என்னவென்றால் நான் தடைகளை தாண்டி உயர்ந்து கொண்டு தான் இருப்பேன்.. நான் நம்பிக்கை இல்லாமல் பேசமாட்டேன். லால் சலாம் படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும். “ என்று குறிப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Well well well....
To many who tried to pull me down and who are still at it..
Especially a few , who stooped so low for their selfish reasons...
And to some on my timelines , who believe n talk about the same nonsense whenever I have anything to post on social media...

I'm… pic.twitter.com/5Cfuj8s5fR

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) July 12, 2023

“நயன்தாராவிடம் உஷாராக இருங்கள்..!” விக்னேஷ் சிவனுக்கு கியூட் அட்வைஸ் வழங்கிய ‘ஜவான்’ ஷாருக் கான்..
சினிமா

“நயன்தாராவிடம் உஷாராக இருங்கள்..!” விக்னேஷ் சிவனுக்கு கியூட் அட்வைஸ் வழங்கிய ‘ஜவான்’ ஷாருக் கான்..

மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..
சினிமா

மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..

‘மாவீரன்’ சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்.! – விவரம் உள்ளே..
சினிமா

‘மாவீரன்’ சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்.! – விவரம் உள்ளே..