இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் திகழும் தளபதி விஜயின் நடிப்பில் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 பாடத்தில் விஜய் நடிக்கிறார்.

இந்திய அளவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனிடையே தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் தயாராகி இருக்கும் பதான் திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று ஜனவரி 10ஆம் தேதி வெளியிட்டார்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் மற்றும் ஜான் ஆபிரஹாம் இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தற்போது வெளிவந்துள்ள பதான் திரைப்படத்தின் ட்ரெய்லர் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழில் ட்ரெய்லரை வெளியிட்ட தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் "மிக்க நன்றி நண்பா! இதனால தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம் LOVE YOU." என தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தெரிவித்துள்ளார். தமிழில் தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாரூக்கான் பதிவிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவு இதோ…
 

Thank you my friend @actorvijay You are Thalapathy for this humble reason, let's meet for delicious feast soon.
Mikka Nandri Nanba! Idhanala Dhaan Neenga Thalapathy koodiya viraivil oru arumaiyana virunthil santhipom.
Love you

— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023