பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள டிரலருக்கு அனைத்து தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. நான்கு ஆண்டுக்கு பிறகு ஷாருக் கான் படம் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலரை தளபதி விஜய் உட்பட பல மொழி பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் அட்லீ ஷாருக் கான் நடித்து வெளிவரவுள்ள பதான் படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில்,  wowww!! மிரட்டக்கூடிய அதிரடி ஆக்ஷன்களுடன் பதான் திரைப்படம் உள்ளது. ஷாருக்கான் சார் நீங்கள் தான் ‘king of mass’. இப்படி உங்களை பார்ப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்,

Wowww!!!! Stunning pure action entertainer Pathan is gona be 👍 @iamsrk ur a king of mass sir feeling happy and proud to see u in this avatar sir kudos to
Sid sir and Adhi sir @yrf @deepikapadukone kudos to entire team
Pathaan https://t.co/8MqBERzkc1

— atlee (@Atlee_dir) January 11, 2023

இதனையடுத்து ஷாருக் கான் அந்த பாதிவை பகிர்ந்து அதனுடன் அவரது பதிலை தெரிவித்தார், அதில், “நன்றி சார்..நீங்கள் தான் ‘King of mass’ இந்த பதான் உங்களுக்கு பிடித்திருந்தால் அதில் நிறைய அர்த்தங்களை கொண்டுள்ளது. எனது அன்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று அட்லீக்கு புகழாரம் சூட்டினார்.

Thank u sir. U being the king of mass…if u liked it, it means a lot. My love to u. https://t.co/8ZkcuDWGL0

— Shah Rukh Khan (@iamsrk) January 11, 2023

இதனையடுத்து ஷாருக் கான் ரசிகர்களும் அட்லீ ரசிகர்களும் அந்த பதிவுகளை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.  மேலும் அட்லீ ரசிகர்கள் அட்லீயை தற்போது king of mass என்று குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனரான அட்லீ. ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மிகப்பெரிய வெற்றியை தந்த ராஜா ராணி படத்திற்கு பின் தளபதி விஜயை இயக்க கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது, அதன் மூலம் ‘தெறி’ திரைப்படம் உருவானது. எதிர்ப்பார்த்தது போல் அட்லி விஜய் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அதன் பின் அடுத்தடுத்த தளபதி விஜய் படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது அதன் படி ‘மெர்சல்’, ‘பிகில்’ உருவானது. விஜயுடனான கூட்டணியை அடுத்து அட்லீ யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்புகிடையே ஷாருக் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி அந்த தகவல் உறுதி செய்யப்பட்டு அட்லீ – ஷாருக் கான் கூட்டணியில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. அனிரூத் இசையில் ஷாருக் கான் உடன் இணைந்து நயன்தாரா, பிரியா மணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது  படத்தின் முதல் பார்வை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.  மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது.  இந்நிலையில் ஷாருக் கான், அட்லீ, தளபதி விஜய் பதிவு அதிகளவு கவனம் பெற்று வருகிறது இதனிடையே பதான் படத்தின் தமிழ் டிரைலரை விஜய் வெளியிட்டார். அதன் பின் அட்லீ வெளியிட்டதையடுத்து விஜய் மற்றும் அட்லீக்கு இதுபோன்ற பதில் பதிவு ஷாருக் கான் பதிவிட்டு வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.