ஷாருக்கான் இந்திய சினிமாவில்  எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக அவதரித்தார்.தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் சினிமாவுக்குள் நுழைந்து ரசிகர்கள் ஆதரவோடு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமையை பெற்றவர் இவர்.நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பு,ஸ்டண்ட் என்று அனைத்து துறைகளிலும் அடித்து நொறுக்கி வருகிறார்

கடந்த சில வருடங்களாக சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷாருக் கான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.பதான்,ஜவான் என அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.பதான் படத்தினை யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.சித்தார்த் ஆனந்த் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

தீபிகா படுகோன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஜான் ஆபிரகாம் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜனவரி 25 2023-ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று படத்தின் நாயகன் ஷாருக் கான் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அதிரடியான டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்