முன்னணி இயக்குனர் ப்ரியதர்ஷன் அவர்களின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன், தென்னிந்திய திரை உலகில் முன்னணி இளம் கதாநாயகியாக வளர்ந்து வருகிறார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ , நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த மாநாடு ஆகிய படங்களில் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன்  நடித்துள்ளார்.

சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மரக்கார், ஹிரித்யம், ப்ரோ டாடி மற்றும் தள்ளுமால ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா.

தளபதி விஜய் அவர்களின் மேலாளரும், மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷின் The Route மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் PASSION STUDIOS இணைந்து தயாரிக்கும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகும்  ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை இயக்குனர் மனோ.C.குமார் எழுதி இயக்குகிறார். 

சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்ய, ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார். ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

It's a shoot wrap for #SeshamMikeilFathima ❤️

Thankyou so much Director @manuckumar4 & team, DOP @dop_santha & team, our Creative Producer @Aiish_suresh, our Executive Producer #RenjithNair and ofcourse @kalyanipriyan, without your support we could not have achieved this. pic.twitter.com/7OAQAm79fC

— TheRoute (@TheRoute) November 1, 2022