தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் ஹரிப்ரியா இசை.விஜய் டிவியில் ஒளிபரப்பானா கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஹரிப்ரியா.இந்த தொடரிலியே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார் ஹரிப்ரியா.

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஹரிப்ரியா.இந்த தொடர் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இந்த தொடரின் பெரிய வெற்றியையும் தனது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்ப்பையும் தொடர்ந்து ஹரிப்ரியா இசை என்று தனது பெயரில் கதாபாத்திரத்தின் பெயரையும் இணைத்து கொண்டார்.

தொடர்ந்து  லட்சுமி வந்தாச்சு,கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் ஹரிப்ரியா.அடுத்ததாக சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான கண்மணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.முதலில் ஏன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் என்று கேள்வி எழுப்பியவர்கள் கூட பாராட்டும் படி இவர் நடித்து அசத்தியிருந்தார்.

சமீபத்தில் ஜீ5-ல் ஒளிபரப்பாகும் தந்துவிட்டேன் என்னை என்ற வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஹரிப்ரியா.தற்போது ஹரிப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்,ஹரிப்ரியாவிற்கு நடிகை சிம்ரன் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவருக்கு சர்ப்ரைஸாக சிம்ரனை மீட் செய்ய ஹரிப்ரியாவின் நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.இது குறித்து ஹரிப்ரியா பதிவிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

A post shared by Haripriya Isai (@haripriyaisai)