சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ஸ்ரீநிதி.நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளிப்படிப்பினை முடித்ததும் மலையாளம் சீரியல் ஒன்றில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீநிதி.இந்த தொடரிலேயே பலரது கவனத்தையும் தனது நடிப்பால் ஈர்த்தார்.அடுத்ததாக ஜீ கேரளம் சேனலில் ஒளிபரப்பான சீரியலில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.அடுத்ததாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான தறி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ஸ்ரீநிதி.சில திரைப்படங்கள்,மியூசிக் வீடியோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்து அசத்தியுள்ளார் ஸ்ரீநிதி.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே தொடரில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவராக மாறினார் ஸ்ரீநிதி.இந்த தொடர் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார் ஸ்ரீநிதி.இந்த தொடர் சமீபத்தில் நிறைவுக்கு வந்தது.இவர் எப்போது அடுத்து சீரியலில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரீநிதி அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.ஜீ கேரளம் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள பாக்கியலக்ஷ்மி என்ற தொடரில் நடிப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீநிதி.இது தமிழ் பாக்கியலக்ஷ்மி ரீமேக் அல்ல புது கதை என தெரிவித்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.