பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் பாகஸ் ஆபீஸ் மன்னனாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக ரிலீஸான பீஸ்ட் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டராகி வசூல் சாதனை படைத்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரான பீஸ்ட் திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் முதல் வாரத்தில் மற்றொரு திரைப்படத்தோடு ஒப்பிட்டு கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி தற்போது பீஸ்ட் மோடில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினரை தன் வீட்டுக்கு அழைத்து ஸ்பெஷல் விருந்து கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார் தளபதி விஜய். பீஸ்ட் படத்தின் கலை இயக்குனர் DRK.கிரண் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி உரையாடலில் இந்த ஸ்பெஷல் ட்ரீட் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

படக்குழுவினர் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வீட்டின் வாசலில் நுழையும் பொழுது, வாசலில் இருந்தே ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்ற தளபதி விஜய் அவர்களுக்கான ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தன் கையாலேயே பரிமாறி உபசரித்து மகழச்சி கடலில் மூழ்கடித்தடித்தாக தெரிவித்துள்ளார். மேலும் தளபதி விஜயின் இந்த விருந்து குறித்து கலை இயக்குனர் கிரண் பேசிய வீடியோ இதோ…