தனது திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர் விதார்த், இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் மூலம் பிரபல கதாநாயகனாக உயர்ந்தார். இதனையடுத்து ஆள், குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பாக அஜித்குமாரின் வீரம், ஜோதிகாவின் காற்றின் மொழி, சசிகுமாரின் கொடிவீரன், HIPHOP தமிழா ஆதியின் அன்பறிவு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நடிகர் விதார்த்தின் 25வது திரைப்படமான கார்பன் திரைப்படம் இந்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து விதார்த் நடிப்பில் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இதனிடையே அடுத்ததாக மலையாளத்தில் வெளிவந்து சினிமா ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட திரைப்படமான விக்ருதி படத்தின் தமிழ் ரீமேக்காக விதார்த் நடிப்பில் தயாராகியுள்ள பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி பிரபலமான OTT தளமான aha தமிழ் தளத்தில் ரிலீசாகிறது.

பயணிகள் கவனிக்கவும் படத்தில் கருணாகரன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, மசூம் சங்கர், பிரேம்குமார்,VJ சரித்திரன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். S.பாண்டி குமார் ஒளிப்பதிவில் RS.சதீஷ்குமார் படத்தொகுப்பு செய்ய, ஷமந்த் நாக் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தின் Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. பயணிகள் கவனிக்கவும் பட கலகலப்பான Sneak Peek வீடியோ இதோ…