பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் சித்தார்த் அடுத்தடுத்து தெலுங்கு & ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான மஹா சமுத்திரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சித்தார்த் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷூட்டிங்கில் விபத்து மற்றும் சில காரணங்களால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் சித்தார்த் முன்னதாக நெட்பிளிக்ஸில் ஹிந்தியில் லைலா வெப்சீரிஸில் முன்ன்ணி கதாபாத்திரத்திலும் அடுத்து தமிழில் நவரசா வெப் சீரிஸில் இன்மை எனும் எபிசோடிலும் நடித்திருந்தார்.  இந்த வரிசையில் அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் வெளிவரவுள்ள வெப்சீரிஸ் ESCAYPE LIVE.

செல்போன்களில் மக்களை அடிமையாக்கும் ஆன்லைன் வீடியோ App-ஐ மையமாக வைத்து தயாராகி இருக்கும் இந்த வெப்சீரிஸில் சித்தார்த்துடன் இணைந்து ஜாவத் ஜஃபெரி, ஸ்வேதா திருப்பதி, சுவஸ்திகா முகர்ஜி, ப்லபிட்டா போர்தகூர், ரிட்விக் ஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சித்தார்த் குமார் திவாரி எழுதி இயக்கியுள்ள ESCAYPE LIVE வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற மே 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் வெப்சீரிஸின்  ட்ரைலர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த ட்ரைலர் இதோ…