இனி டைம்லூப் சின்னத்திரையில்....மாநாடு டிவி ப்ரீமியர் தேதி இதோ !
By Aravind Selvam | Galatta | April 26, 2022 18:51 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லை.
உடல் பருமனாக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த STR அல்டிமேட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி பழைய நிலைக்கு திரும்பினார்.இவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.வெங்கட் பிரபு இந்த படத்தினை இயக்கியுள்ளார்.சுரேஷ் காமாட்சி இந்த படத்தினை தயாரித்திருந்தார்.
எஸ் ஜே சூர்யா,கல்யாணி ப்ரியதர்ஷன்,பிரேம்ஜி,எஸ் ஏ சந்திரசேகர்,ஒய் ஜி மகேந்திரன் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.டைம்லூப் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.சிம்பு-எஸ் ஜே சூர்யா திரையில் ஒன்றாக தோன்றும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
வித்தியாசமான கதைக்களத்தில் அசத்தலான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எபோகித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் 100 நாட்களை கடந்து வெற்றி அடைந்தது.தற்போது இந்த படம் விஜய் டிவியில் வரும் மே 1ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ஒளிபரப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்
இந்த May Day-க்கு செம்ம மாஸ் படம் On the way.. 😎
— Vijay Television (@vijaytelevision) April 26, 2022
மே தின சிறப்பு திரைப்படம்! மாநாடு - வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #MaanaaduOnVijayTV #WorldTelevisionPremiere @SilambarasanTR_ @iam_SJSuryah @kalyanipriyan @vp_offl @thisisysr #Maanaadu pic.twitter.com/vBleXMXEeq
This famous Maanaadu dialogue becomes the title of a new big film! Check Out!
07/04/2022 12:57 PM
OFFICIAL: After Maanaadu, it is going to be the sequel of this superhit film!
04/03/2022 08:13 PM