விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த தொடர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் இவரது நடிப்பினை கண்டு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் நிறைவடைந்த பின் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி அவ்வப்போது போட்டோக்களையும்,வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழை தவிர தெலுங்கிலும் சில  சூப்பர்ஹிட் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி.

தமிழ் பிக்பாஸ் 5 தொடரில் பங்கேற்று மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார் பவானி.இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் 2 தொடரில் பங்கேற்றனர்.பிக்பாஸ் தொடரில் இவருடன் நெருக்கமாக இருந்த நடன இயக்குனர்அமீர் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக பங்கேற்கிறார்.இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் இடத்தையும் தட்டி சென்றனர் அமீர் மற்றும் பவானி.இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதையும் தெரிவித்தனர்.தற்போது அமீர் மற்றும் பவானி இணைந்து நடித்துள்ள செந்தாமரையே என்ற மியூசிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செம ரொமான்டிக்கான இந்த பாடல் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.