தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கூல் சுரேஷ், நடிகர் சிலம்பரசன்.TR அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த சில காலமாக பல திரைப்படங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கு திரையரங்குகளுக்கு செல்லும் கூல் சுரேஷ் வெளியில் வந்து கொடுக்கும் விமர்சனமும் அவரது பேச்சும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகின.

பல ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சியில் திரையரங்கிற்கு வரும் கூல் சுரேஷை காண்பதற்காகவே அந்த திரையரங்குகளை தேடி செல்வதும் உண்டு. முன்னதாக வெந்து தணிந்தது காடு புகைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எந்த திரையரங்கிற்கு எந்த திரைப்படத்திற்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு படத்தின் வாசகமாக, "வெந்து தணிந்தது காடு… தலைவன் சிலம்பரசனுக்கு வணக்கத்தை போடு" என கூல் சுரேஷ் பேசுவது ட்ரெண்ட் ஆனது.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு வந்த கூல் சுரேஷை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் ரசிகர்கள் கூல் சுரேஷுக்கு மாலை அணிவித்தும் கட்டி அணைத்தும் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது ஒருபுறமிருக்க இதுபோன்ற புரமோஷன் பணிகள் அனைத்தும் கூல் சுரேஷ் தனது சுயலாபத்திற்காக வேலை செய்கிறார் என்றும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பேசி வந்தனர்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் கூல் சுரேஷ் காணும் ஆர்வத்தில் அவரது காரின் மீது ஏறியதும் அவர் காரின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்தும் நெட்டிசன்கள் கூல் சுரேஷுக்கு இது தேவைதான் என்பதுபோல வன்மத்தோடு பேசியது நடிகர் கூல் சுரேஷ் மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்து எமோஷனலான வீடியோ ஒன்றை கூல் சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை… தன்னைப் பற்றி அவதூறாக பேச வேண்டாம் என்று நெகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்ட கூல் சுரேஷ் நடிகர் சிலம்பரசன்.TR தன்னை தொலைபேசியில் அழைத்து, "நான் திரையரங்கிற்கு வந்தால் கூட இவ்வளவு வரவேற்பு இருக்குமா என்று தெரியாது… உனக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது இதை அப்படியே தக்க வைத்துக் கொள்" என கூறியதாக தெரிவித்து, இதுபோல எந்த நடிகர் சொல்லுவார் .. எனக்கு எல்லாமே தலைவன் சிலம்பரசன்.TR தான்… எனவும் குறிப்பிட்டு கண்கலங்கி பேசியுள்ளார். நடிகர் கூல் சுரேஷ் கண்கலங்கி பேசிய அந்த வீடியோ இதோ…


 

 

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)