கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த சார்பட்டா பரம்பரை நடிகர்!
By Anand S | Galatta | September 20, 2022 18:32 PM IST
இந்த ஆண்டு (2022) தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாக, தொடர்ந்து ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த The Grey Man திரைப்படமும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கடைசியாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகிறது.
மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனது அடுத்த படமாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் உடன் இணைகிறார் தனுஷ்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை நிவேதிதா சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்திலும் கேஜிஎஃப் திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்த நடிகர் ஜான் கொக்கின் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். வரிசையாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To pack a punch, we have our very own @johnkokken1 #CaptainMiller #JohnKokken@dhanushkraja @sundeepkishan @priyankaamohan @gvprakash @nivedhithaa_Sat @SathyaJyothi @CaptainMilIer pic.twitter.com/1zKwo0Ciom
— Arun Matheswaran (@ArunMatheswaran) September 20, 2022
Dhanush reveals his stylish look for Captain Miller - New Excliting Glimpse out!
19/09/2022 04:23 PM