தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமான ஒருவராக இருந்து வருபவர் துருவ் விக்ரம்.சீயான் விக்ரமின் மகனாக பலருக்கும் அறிமுகமான இவர்,ஆதித்ய வர்மா படத்தின் ஹீரோவாக நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார் துருவ்.

இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து விக்ரமுடன் இவர் இணைந்து நடித்த மகான் படம் சில காரணங்களால் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.பலரிடமும் நல்ல வரவேற்பை இந்த பாடல் பெற்றிருந்தது.பலரது கனவு கண்ணனாக துருவ் விக்ரம் அவதரித்துள்ளார்.

துருவ் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இந்த படத்தினை தொடர்ந்து கர்ணன்,பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் புது படத்தில் நடிக்கவுள்ளார்.கபடியை மையமாக வைத்து இந்த படம் உருவாகவுள்ளது.நடிப்பு மட்டுமல்லாம் பாடல் பாடுவதிலும் பெரிதும் ஆர்வமுடையவராக துருவ் இருந்து வருகிறார்.

தனது மியூசிக் திறமைகளை ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ள யூடியூப்பில் இணைந்துள்ளார் துருவ் விக்ரம்.விரைவில் தனது ஆல்பம் பாடல்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.இவரது முதல் ஆல்பம் பாடல் மனசே என பெயரிடப்பட்டுள்ளது.இந்த பாடல் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த பாடலின் போஸ்டர் ஒன்றை துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhruv (@dhruv.vikram)