சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த செம்பருத்தி நடிகர் !
By Aravind Selvam | Galatta | July 03, 2020 11:02 AM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.
கொரோனா காரணமாக பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்,இதற்கு செம்பருத்தி சீரியல் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராமில் லைவ் வருவது என்று அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தனர்.
இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர்.தொகுப்பாளராகவும்,டான்சர் ஆகவும் தனது திறமையை வெளிப்படுத்திய கதிர்.செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார் கதிர்.இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.சர்ப்ரைஸாக நிச்சயதார்த்தத்தை முடித்த கதிருக்கு பிரபலன்களிடமும்,ரசிகர்களிடமும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Legendary dance choreographer Saroj Khan no more!
03/07/2020 09:31 AM
WOW: Thalapathy Vijay is the only actor to have 3 films in this list!
02/07/2020 08:00 PM
Interesting Promo Video of Vidya Balan's next biggie | Biopic of this genius!
02/07/2020 07:14 PM