தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகனாகவும் வில்லன் & குணச்சித்திர வேடங்கள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தும் சிறந்த நடிகராகவும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள ப்ரின்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ப்ரின்ஸ் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ்டுடே படத்திலும் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வரும் நவம்பர் 4ஆம் தேதி லவ்டுடே திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே அடுத்ததாக இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் தயாராகும் வெப்பன் படத்தில் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்கி & தரமணி படங்களில் நடித்த நடிகர் வசந்த் ரவி - சத்யராஜ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வெப்பன் திரைப்படத்தை மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நாஷ் படத்தொகுப்பு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெப்பன் திரைப்படத்திலிருந்து சத்யராஜின் மிரட்டலான போஸ்டர் வெளியான நிலையில், தற்போது நடிகர் வசந்த் ரவியின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புதிய போஸ்டர் இதோ…
 

Presenting the fierce look of Vasanth Ravi, teaming up #Sathyaraj for the hunt. #huntbegins

#Sathyaraj @iamvasanthravi #WeaponMovie #வெப்பன்@GuhanSenniappan @ManzoorMS @MillionStudioss @GhibranOfficial @Prabu_Rhagav @editorNash#SubendarArt #Leka_Penacea @stuntsudesh pic.twitter.com/HWXaZ801Q6

— Million Studio (@MillionStudioss) October 13, 2022