தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் விளங்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ஆக்சன் த்ரில்லர் படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் #AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 3-வது முறையாக இணைந்துள்ள அஜித்குமார் - H.வினோத் - போனிகபூர் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள துணிவு படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ராஜதந்திரம் வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு துணிவு திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே தனது பைக் ரைடிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார் தற்சமயம் தாய்லாந்து நாட்டில் தனது பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தாய்லாந்தின் பாங்காக்கில் பைக் ரைடிங் செய்துவரும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#AjithKumar Sir ❤️🔥#Thunivu pic.twitter.com/I0EEpHLhXP

— AJITHKUMAR FANS TEAM 👑 (@AKFansTeam) October 13, 2022

The BOSS #AK #AjithKumar 🔥😎#AjithKumar #NoGutsNoGlory pic.twitter.com/WRmpHO9kk8

— AJITHKUMAR FANS TEAM 👑 (@AKFansTeam) October 13, 2022

The Music Begins..!! 🔥🔥🔥😎#AjithKumar #Thunivu #NoGutsNoGlory pic.twitter.com/ZF4bK2nqQ5

— AJITHKUMAR FANS TEAM 👑 (@AKFansTeam) October 13, 2022