தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் தொடர்ந்து ரசிகர்களுக்கு வெரைட்டியான திரைப்படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி அடுத்ததாக, குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் கண கச்சிதமாக நடித்து அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்துள்ளார்.

இதனிடையே இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, தீபாவளி வெளியீடாக  வரும் அக்டோபர் 21-ம் தேதி ரிலீசாகவுள்ளது.பலவிதமான கெட்டப்புகளில், இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

மேலும் சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோரும் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்தை பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்யும் சர்தார் படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Gear up for the exciting trailer of #Sardar - coming your way tomorrow!

A @Karthi_Offl mega treat 😍#SardarTrailer#SardarDeepavali 🔥@Prince_Pictures @AnnapurnaStdios @gvprakash @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben pic.twitter.com/dujC0CUeJr

— Prince Pictures (@Prince_Pictures) October 13, 2022