தொடர்ந்து நல்ல கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து, அனைத்து சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடுத்ததாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் தற்போது பாலிவுட்டில் களமிறங்கிய விஜய் சேதுபதி, நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும்  அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹீத் கபூர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனிடையே விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் 19(1)(a). 

அறிமுக இயக்குனர் இந்து.VS இயக்கத்தில் 19(1)(a) திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யாமேனன் இந்திரஜித் சுகுமாரன், இந்தரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 19(1)(a) திரைப்படத்திற்கு மகேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 19(1)(a) திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி மற்றும் இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

19(1)(a) Coming Soon On #DisneyPlusHotstarMultiplex#191A #DisneyPlusHotstarMultiplex #VijaySethupathi #NithyaMenen #IndrajithSukumaran #DisneyPlusHotstarMultiplex #DisneyPlusHotstar #DisneyPlusHotstarMalayalam pic.twitter.com/uLFiHq6cyF

— VijaySethupathi (@VijaySethuOffl) July 16, 2022