முன்னணி நகைச்சுவை நடிகராக சிறந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவை மையபடுத்திய திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த குலு குலு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

இந்த வரிசையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது திரைப்படமாக தயாராகி வருகிறது SANTA15.  #SANTA15 திரைப்படத்தில் சந்தானம் உடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, ராகினி திரிவேதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிக்கும் SANTA15 படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். #SANTA15 படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று #SANTA15 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

The much awaited #SANTA15 First Look will be launched on Vinayagar Chahurthi, August 31st 💥 Stay tuned !!@iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/LNqMTdOMRQ

— Fortune films (@Fortune_films) August 23, 2022