ஹீரோவாகிறார் ஜானி மாஸ்டர்...புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
By Anand S | Galatta | August 23, 2022 15:59 PM IST

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடன இயக்குனராக பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜானி மாஸ்டர். நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த குலேபகாவலி திரைப்படத்தின் மூலம் ஜானி மாஸ்டர் தமிழ்த் திரையுலகில் நடன இயக்குனராக களம் இறங்கினார்.
தொடர்ந்து மாரி 2 படத்தில் ரவுடி பேபி, நம்ம வீட்டு பிள்ளை படத்தின் காந்த கண்ணழகி, பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ, அள வைகுண்டபுரம்லோ படத்தின் புட்ட பொம்மா, டாக்டர் படத்தின் செல்லம்மா, புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி, எதற்கும் துணிந்தவன் படத்தின் சும்மா சுர்ருன்னு, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா என பல பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார் ஜானி மாஸ்டர்.
நடன இயக்குனராக அசத்தி வந்த ஜானி மாஸ்டர் தற்போது கதாநாயகனாக களமிறங்குகிறார். இயக்குனர் ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் யதா ராஜா ததா ப்ரஜா என்னும் திரைப்படத்தில் ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தைஓம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
யதா ராஜா ததா ப்ரஜா படத்தில் ஜானி மாஸ்டர் உடன் இணைந்து ஸ்ரஷ்டி வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் ஜானி மாஸ்டரின் யதா ராஜா ததா ப்ரஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆகஸ்ட் 23-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இதில் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thank you for gracing the Pooja Ceremony of my new film #YathaRajaTathaPraja 🙏🏼@ImSharwanand garu, #AayushSharma ji & #JKarunaKumar garu 😇@imVdeshK @verma_shrasti #SrinivasVittala #HareshPatel #OmMovieCreations #SriKrishnaMovieCreations @PulagamOfficial pic.twitter.com/ggVBogGXSL
— Jani Master (@AlwaysJani) August 22, 2022
Big update on Shankar's RC 15 with Ram Charan - Jani Master onboard!
16/11/2021 03:35 PM
Jani Master onboard for Dhanush's Thiruchitrambalam - exciting news for fans!
19/09/2021 03:36 PM