இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் திரையுலகிற்கு எண்ணற்ற சிறந்த படைப்புகளை தனது இயக்கத்தில் வழங்கியுள்ளார். இதனையடுத்து தற்போது நடிகராகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பாரதிராஜாவின் நடிப்பு அனைராலும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பாரதிராஜா அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.