படத்திற்கு படம் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை ஆண்ட்ரியா அடுத்ததாக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்திலும் பிரபல நடன இயக்குனர் பாபு ஆண்டனி இயக்குனராக களமிறங்கியிருக்கும் புதிய படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் விரைவில் சோனி லைவ் தளத்தில் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளது. தொடர்ந்து மாளிகை, நோ என்ட்ரி மற்றும் கா உள்ளிட்ட திரைப்படங்களும் ஆண்ட்ரியா நடிப்பில் வரிசையாக ரிலீஸாக காத்திருக்கின்றன. இதனிடையே ஆண்ட்ரியா நடிப்பில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ளது பிசாசு 2 திரைப்படம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள பிசாசு 2 படத்திற்கு கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ள பிசாசு 2 படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார். இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் 2வது பாடலாக நெஞ்சை கேளு பாடல் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 5மணிக்கு வெளியாகும் என் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#NenjaiKelu 2nd Single from @DirectorMysskin's #Pisasu2 is releasing on August 25th 5PM

Music #KarthikRaja 🎼
Singer @PriyankaNKoffl 🎤
Lyrics #Kabilan ✍️@andrea_jeremiah @VijaySethuOffl @Lv_Sri @shamna_kkasim @Actorsanthosh @kbsriram16 @saregamasouth @teamaimpr pic.twitter.com/2ZDUAUIXRM

— RockFort Entertainment (@Rockfortent) August 23, 2022