தமிழ் சினிமாவின் நட்சத்திர காமெடியனாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாகவும் நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மேயாதமான் & ஆடை படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த குலுகுலு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது.

குலுகுலு திரைப்படத்தை தொடர்ந்து காமெடி ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக சந்தானம் நடிப்பில் வெளிவர தயாராகி வரும் திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். முன்னதாக கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீ நிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இதனிடையே பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் கிக். ஹீரோவாக சந்தானத்தின் திரைப்படத்தில் 15வது திரைப்படமாக தயாராகியிருக்கும் கிக் படத்தில் தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ள கிக் திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். கிக் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் செந்திலின், ‘கேசியோ’ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…

 

The comedy legend of Tamil cinema - #Senthil sharing screen space with @iamsanthanam for the very first time. See him as CASIO in #Kick 🤞#கிக் #SantasKick @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms #ProductionNo10 pic.twitter.com/reK0HKy4le

— Fortune films (@Fortune_films) September 15, 2022