புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவல், இயக்குனர் மணிரத்னத்தின் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் திரைப்படமாக உருப்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
 
முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 

பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், லால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு, ஷோபித்தா, கிஷோர், ஜெயசித்ரா, அஸ்வின் காக்கமனு, மோகன் ராமன், ரியாஸ்கான், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து அட்டகாசமான புதிய போஸ்டர் தற்போது வெளியானது. ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் (எ) பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி, வானதி, ரவிதாஸன் ஆகிய கதாபாத்திரங்கள் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர் இதோ…
 

The fight for the Chola throne!
2 weeks to witness #PS1 on the big screen!

In theatres worldwide from 30th September ⚔️
Releasing in Tamil, Hindi, Telugu, Kannada, and Malayalam.#PonniyinSelvan #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/7FXOi0RSdM

— Madras Talkies (@MadrasTalkies_) September 15, 2022