படத்திற்கு படம் நல்ல கதாபாத்திரங்களையும் நல்ல கதை களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டில் (2022) வரிசையாக கார்த்தியின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முதலாவதாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இதனை அடுத்து இந்த ஆண்டு (2022) தீபாவளி வெளியீடாக வருகிறது கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம். இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சர்தார் படத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடிக்க, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள சர்தார் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்யும் சர்தார் படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் முதல் பாடல் வெகு விரைவில் ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

#FirstSingle dropping soon!!#Sardar releasing this #Deepavali !!
Get ready for #SardarDeepavali !!@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @AnnapurnaStdios@Psmithran @gvprakash@RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben pic.twitter.com/4soECSKMuZ

— Prince Pictures (@Prince_Pictures) September 15, 2022