இந்திய திரை உலகின் முன்னணி ஜாம்பவான்களின் ஒருவராகவும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஸ்டாராகவும் திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அடுத்ததாக அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக போலா ஷங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். போலா ஷங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்ததாக பிரபல இளம் தெலுங்கு இயக்குனர்களான பாபி மற்றும் வெங்கி குடுமலா ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ள சிரஞ்சீவி, தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், நடிகை ராதிகாவின் ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன

முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடித்து மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் காட்ஃபாதர். நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவில், S.தமன் இசையமைத்துள்ளார். காட்ஃபாதர் படத்தின் தார் மார் தக்கர் மார் பாடலுக்கு நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். இந்நிலையில் காட்ஃபாதர் படத்தின் முதல் பாடலான தார் மார் தக்கர் மார் பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…

 

#ThaarMaarThakkarMaar out on @spotifyindia
🎧

Telugu- https://t.co/SFQFeUtuKt
Hindi- https://t.co/annzMprsyL

Lyrical 🔜!#GodFather@KChiruTweets @BeingSalmanKhan @jayam_mohanraja #Nayanthara @MusicThaman pic.twitter.com/0bnnWMPuzV

— Saregama South (@saregamasouth) September 15, 2022